கோவை: பாஜகவின் முக்கிய புள்ளி கட்சியிருந்து நிரந்தரமாக நீக்கம்!
KOvai BJP Sathish Dismissed
கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் தொடர்பான விவகாரத்தில், தவறான தகவலை பரப்பிய புகாரின் கீழ் சதீஷ் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி பற்றி நடந்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் சீனிவாசன், இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு மாறுபட்ட ஜிஎஸ்டி வரி இருப்பதால், பில் போடுவதில் சிக்கல் இருப்பதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் தகராறு செய்வதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
அன்று மாலையே, நிர்மலா சீதாராமனிடம் சீனிவாசன் மன்னிப்புக் கேட்ட விடியோ ஒன்றை பாஜகவினர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தனர்.
நியாயமாக கேள்வி கேட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்ததாக, அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு உள்ளநிலையில், தற்போது பாஜக நிர்வாகி ஒருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
English Summary
KOvai BJP Sathish Dismissed