ஒரே வாரத்தில் அந்தர் பல்டி அடித்த திமுக பிரமுகர் - தட்டி தூக்கிய பாஜக.!
kovai bjp udhaya soriyan come back in one week
பா.ஜ.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த உதயசூரியன் நேற்று மீண்டும் தனது மனதை மாற்றிக் கொண்டு பா.ஜ.க. மாநில பொது செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
கோவை மாநகரில் சுந்தராபுரம் பா.ஜ.க மண்டல பொதுச்செயலாளராக உதயசூரியன் என்பவர் இருந்தார். இவர் கடந்த 13 வருடங்களாக பா.ஜ.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் அவர், திடீரென பா.ஜ.க.வில் இருந்து விலகி கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.
இதனை தொடர்ந்து, 7 நாட்களுக்கு பிறகு உதயசூரியன் தனது மனதை மாற்றிக் கொண்டு தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க. மாநில பொது செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
இது குறித்து உதயசூரியன் தெரிவித்ததாவது,
கடந்த 13 ஆண்டுகளாக கட்சிக்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன். இந்த உழைப்பிற்கு கிடைத்தது தான் சுந்தராபுரம் பா.ஜ.க மண்டல பொதுச்செயலாளர் பதவி. கடந்த சில மாதங்களாகவே, எனக்கும், மாவட்ட நிர்வாகிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.
இந்த நிலையில், எனக்கு தி.மு.க.விடம் இருந்து தங்கள் கட்சியில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தது. எனக்கு அண்ணாமலையை மிகவும் பிடிக்கும். மாவட்ட நிர்வாகி மீது இருந்த அதிருப்தி காரணமாக தான் தி.மு.க.வில் இணைந்தேன். ஆனால் அங்கு என்னால் இருக்க முடியவில்லை.
நாங்கள் தேசிய கொள்கை கொண்டவர்கள். என்னால் திராவிட கொள்கையை பின்பற்ற முடியவில்லை. இதனால், பா.ஜ.க.விலேயே சேர்ந்து விடலாம் என்று எண்ணி, அதன்படியே மீண்டும் பா.ஜ.கவில் இணைந்தேன். கட்சிக்காக நான் மேலும் உழைப்பேன்". என்று அவர் தெரிவித்தார்.
English Summary
kovai bjp udhaya soriyan come back in one week