தமிழகத்தில் உருவான புதிய அரசியல் கட்சி! அரசு ஆள்பவர்களாக இளைஞர்களை மாற்றுவோம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இயக்கமாக தொடங்கப்பட்டது . 1995ஆம் ஆண்டு ஜவாஹிருல்லா, ஜைனுல் ஆபிதீன், பாக்கர், ஹைதர்அலி, குணங்குடி ஹனீபா போன்றவர்களால் தொடங்கப்பட்டது. இதன் பிறகு அரசியல் பிரிவாக கடந்த 2009 ஆம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இருந்து கோவை செய்யது பிரிந்து தனிக் கட்சியை தொடங்கியுள்ளார். தமுமுகவில் நிலவி வந்த உட்கட்சி பிரச்சனை காரணமாக முஸ்லிம் முன்னணி கழகம் என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கினார். முஸ்லிம் முன்னணி கழக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக கோவை செய்யது, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்களாக பாளை பாரூக், தூத்துக்குடி யூசுப் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "அன்பான சமுதாய சொந்தங்களே அனைவரும் நலமா..?

ஏக இறைவனின் கருணையும் நேசமும் பாசமும் என்றும் உங்கள் மீது உண்டாவதாக. எப்படியும் நீங்கள் என்னை விமர்சிக்க தான் போகிறீர்கள் பரவாயில்லை. அதை நாங்கள் ஸ்போட்டிவாக எடுத்துக்கொள்கிறோம். 

ஏன் தெரியுமா எங்களை விமர்சிக்கவும் நேசிக்கவும் உரிமையுள்ளவர்கள் நீங்கள் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன்.

நாங்கள் லெட்டெர்பேடு அமைப்பாகவே இருந்துவிட்டு போகிறோம் பரவாயில்லை எங்கள் நோக்கம் இதுதான். சமுதாயத்தில் மார்க்கத்தின் பெயராலும் , அரசியல் நோக்கங்களுக்காகவும் மற்றும் அரசிடம் போராடி நீதி கேட்டு தான் இயக்கங்களும் கட்சிகளும் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. 

ஆனால் முஸ்லிம் முன்னணி கழகமானது இளைய சமுதாயத்தை கல்வி, வேலைவாய்ப்பு , சமூக நீதி ,சமூக சேவை, விளையாட்டு, பண்பட்ட அரசியல் போன்றவைகளில் ஆர்வப்படுத்தி வழி காட்டுவதன் மூலம் ஒரு சிறந்த வருங்கால சமூகமாக இன்றைய இளைஞர்களை முன்னணியில் கொண்டு வந்து மற்ற சமூகங்கள் மற்றும் அரசாள்பவர்களால் மதிக்கப்படும் கூட்டமாக முன்னணிப்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்படுகிறது என அந்த கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai saiad starts new political MMK party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->