திமுக அமைச்சர், அப்புவுக்கு எதிராக கருப்பு கொடி! தூத்துக்குடியில் பரபரப்பு!
Kovilpatti DMK Minister Appavu Black Flag Protest
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் செயல்படும் தனியார் தினசரி சந்தை தொடர்பாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சட்டவிதிமுறைகளை மீறி இந்த சந்தை செயல்படுவதாகவும், நில உரிமையில் முறைகேடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சந்தையில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக வியாழக்கிழமை கால்கோள் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக நகரம் முழுவதும் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன, அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதை கண்டித்து, தெற்கு திட்டங்குளம் கிராம மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர் நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி, மெயின் சாலை முழுவதும் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் பேரரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் வருகையின் போது கறுப்புக் கொடி காட்ட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பால், நிகழ்வு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
English Summary
Kovilpatti DMK Minister Appavu Black Flag Protest