ஈரோடு கிழக்கு காங்கிரசுக்கு தான்... தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் நகர்வுகள் அரங்கேறி வருகின்றன. அதிமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு 14 பேர் கொண்ட பணிக்குழுவை அறிவித்தார். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற கூடும் என பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தமாகா தலைவர் ஜிகே வாசனை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு மீண்டும் வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே வரும் இடைத்தேர்தலிலும் காங்கிரஸ்தான் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி கட்சிகளான திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொது உரிமை கட்சிகள் தலைவர்களை இன்று மாலை முதல் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற அவர்களின் ஆதரவை கோர உள்ளோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KS Alagiri announced Congress will contest in Erode East byelection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->