கும்பகோணத்தில் பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை.!
kumbakonam rowdy murder june
கும்பகோணத்தில் பிரபல ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம், நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர் மீது கொலை வழக்கு ஒன்று நிறுவையில் உள்ளது.

சம்பவம் நடந்த அன்று இவரை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று வழி மறைத்து, சரா மாறியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. மர்ம கும்பல் கொடூரமாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி உயிரிழந்தார்.

புண்ணியமூர்த்தி அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், முன் விரதம் காரணமாக புண்ணியமூர்த்தி படுகொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் பகுதியில் பிரபலமாக இருந்த ரவுடி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
kumbakonam rowdy murder june