திமுக அமைச்சர் மருமகனின் நில மோசடி! கூண்டோடு சிக்கிய 6 பேர் மீது வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் பெரியகருப்பனின் மருமகன் குணசேகரன் மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்பவரின் கணவர் மோகன் என்பவருடன் திமுக அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் கல்குவாரி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளனர்.

உடல்நல குறைவால் மோகன் கடந்த 2021 ஆம் ஆண்டு இறந்த பிறகு 2023ம் ஆண்டு மோகன் உயிரோடு இருப்பது போன்று போலி ஆவணங்களை தயாரித்து அந்த நிறுவனத்தில் இருந்து மோகன் வெளியேறி விட்டதாக சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் சென்னை சார்பதிவாளரிடம் மனு அளித்தனர்.

அதனை ஏற்று சார் பதிவாளர் நிறுவனத்தின் பங்குதாரர் பட்டியலில் இருந்து மோகனை நீக்கி உள்ளார். இதனை அறிந்த மோகனின் மனைவி இசக்கியம்மாள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பெயரில் சென்னை துணை மேயர் மகேஷ் குமார், திமுக அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், தென் சென்னை மாவட்ட சார் பதிவாளர் சத்திய பிரித்தா உள்ளிட்ட 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நில மோசடியில் ஈடுபட்ட திமுக அமைச்சரின் மருமகன், சென்னை மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட 6 பேர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Land grab case registered against DMK minister son in law deputy mayor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->