நில அபகரிப்பு விவகாரம் : சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை.! - Seithipunal
Seithipunal


நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரணை செய்வதற்காக காவல் துறையில் நில அபகரிப்பு பிரிவை தமிழக அரசு உருவாக்கியது. மேலும், 36 சிறப்பு நீதிமன்றங்களும் தொடங்கப்பட்டன.

இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம், நில அபகரிப்பு புகார்களை சிறப்பு நீதிமன்றங்களில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு  மாற்றப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது என்று கருது தெரிவித்தது.

மேலும், நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Land grab case Supreme Court stays Chennai High Court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->