சனாதன சர்ச்சை || உதயநிதி, சேகர்பாபு பதவிக்கு வேட்டு? ஆதாரங்களை கேட்கும் உயர் நீதிமன்றம்!
MadrasHC asked for evidence Udayanidhi spoke about Sanatanam Dharma
கடந்த மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார்கள் குவிந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கம் அளிக்க உத்தரவிட கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் கிஷோர் குமார், மனோகரன், ஜெயக்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிதா சுமன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் இந்த வழக்கு விசாரணை உகந்தது அல்ல, அவர்களின் நியமனம் எந்த சட்டத் பிரிவுக்கும் எதிரானது அல்ல, அவர்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என வாதிட்டார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்தான எந்த விவரமும் மனுவில் இடம் பெறவில்லை எனவும், அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என தனது வாதத்தினை முன் வைத்தார். அமைச்சர் சேகர் பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோதி ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
கோ வரண்டோ வழக்கு என்பது தனி நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனவும், இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மட்டுமே விசாரணை நடத்த முடியும் எனவும் தனது வார்த்தை முன் வைத்தார்.
அமைச்சர்கள் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மனுதாரர்கள் அமைச்சர் உதயநிதி பேசியது குறித்தான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கில் விசாரணையை வரும் அக்டோபர் 11ஆம் தேதிக்கு ஒத்துழைத்தார்.
குறித்து பேசியதற்கு எதிராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
English Summary
MadrasHC asked for evidence Udayanidhi spoke about Sanatanam Dharma