அவதூறாக பேசிய "அதிமுக முன்னாள் நிர்வாகி".. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!!
Madrashc interm stay on avraju talk about aiadmk venkatachalam
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜு அதிமுக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம், நடிகர் கருணாஸ், நடிகை த்ரிஷா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் திரையுலக வட்டாரத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் தன்னைக் குறித்து அவதூறு அறிவித்து தெரிவித்த ஏ.வி ராஜுவுக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் தன் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், ராஜூவின் பேச்சால் அதிமுகவுக்கு இருந்த பெண்கள் ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாஜலத்தின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
English Summary
Madrashc interm stay on avraju talk about aiadmk venkatachalam