திமுகவுக்கு அடுத்த தலைவலி! அக்.10ம் தேதிக்குள்.. ஊழல் வழக்கில் பரபரப்பு உத்தரவு! - Seithipunal
Seithipunal


கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது புதிய தலைமைச் செயலகம் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிய தலைமைச்செயலகம் கட்டுமான பணியின் முறைகேடு நடந்துள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அதனை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துறைமுகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ரகுபதி ஆணையத்தை கலைத்ததோடு முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 

நீதிமன்ற உத்தரவினை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அரசாணை வெளியிட்டது. இரண்டாவது முறையாக விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தற்போதைய முதல்வரும், அப்போது எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்தது.

இந்த அரசாணை ரத்து செய்ததற்கு எதிராக தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை தற்போதைய திமுக அரசு வாபஸ் பெற முடிவு செய்திருந்த நிலையில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தன்னை இணைக்க கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுவில் புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைகேடு தொடர்பாக கடந்த 2018ல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்ததாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசியல் தனது தொழில் இல்லை எனவும், மருத்துவர் என்ற அடிப்படையில் இந்த புகார் அளித்ததாகவும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதத்தினை ஏற்றுக் கொண்ட நீதிபதி 2 வாரங்களுக்குள் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்து இருந்த நிலையில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு உரிய முறையில் ஜெயவர்த்தன் புகார் அளித்ததன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரணை நடத்தி மூடி முத்தரவிட்ட உரையில் அக்.10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். 

அதேபோன்று இந்த வழக்கில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தனை இணைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து அக்டோபர் 10ம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களை உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC orders to DVAC reinvestigate new chief secretariat case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->