கோயில் நில மோசடி வழக்கு.. வசமாக சிக்கிய பாஜக எம்எல்ஏ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கோவில் நிலம் மோசடி வழக்கில் புதுவை பாஜக எம்எல்ஏ ஜான் குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. 

இந்த வழக்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக எம்எல்ஏ ஜான் குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பாஜக எம்எல்ஏ ஜான் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் காவல்துறையினரின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றால் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என எச்சரித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC orders to file report on BJP MLA temple land grabbing case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->