மதுரையில் வெளுத்து வாங்கிய பலத்த கனமழை!...ரூ.11.9 லட்சம் கோடி ஒதுக்கி முதலமைச்சர் போட்ட உத்தரவு! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று அவருக்கு மரியாதையை செலுத்தினர்.

இந்த நிலையில், மதுரை செல்லூர் பகுதியில் கூடுதல் கால்வாய் அமைப்பதற்காக 11 கோடியே 90 இலட்சம் ரூபாயை அதற்காக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சிஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன்.

அப்போது, செல்லூர் பகுதியில் கூடுதல் கால்வாய் அமைக்க வேண்டியதன் தேவை குறித்து எடுத்துக் கூறினர். உடனடியாக, 11 கோடியே 90 இலட்சம் ரூபாயை அதற்காக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டேன்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு நிரந்தரத் தீர்வு காண அறிவுறுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai was washed away by heavy rains the chief minister omadumrdered to set aside rupees 11 and 9 lakh crored


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->