முக்கிய அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சியை சார்ந்த அணில் பராப் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு ரத்னகிரி மாவட்டத்தில் அடுத்த டபோலி பகுதியில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 10 லட்சம் ஆகும். எனினும் இந்த நிலத்தை 2019 ஆம் ஆண்டில்தான் அவர் பதிவு செய்துள்ளார். 2017 முதல் 20 வரையிலான கால கட்டத்தில் அந்த நிலத்தில் தங்கும் விடுதி கட்டப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டு அந்த நிலம் மும்பையை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் சதானந்த் கதம்  என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 

இதில் மோசடி நடைபெற்று உள்ளதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், அமைச்சர் அணில்  பராப்புக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமைச்சர் அணில்  பராப்புக்கு சொந்தமான மும்பை வீடு, டபோலி மற்றும் புனே ஆகிய இடங்கள் உட்பட ஏழு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையால் சிவசேனா கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharashtra minister anil parab home raid


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->