தேர்தல் தோல்வி எதிரொலி! பதவியை ராஜினாமா செய்த பாஜக தலைவர்!
Maharashtra wise chief minister resign lok sabha election reflect
நடந்து முடிந்த மக்களவைப் பொது தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவை வருகின்ற எட்டாம் தேதி பதவி ஏற்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த தேர்தலை பொருத்தவரை உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக சரிவை சந்தித்து உள்ளது. இதன் காரணமாகவே பாஜக பெரும்பான்மையை பெறாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஆக உள்ள பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், தோல்விக்கு பொறுப்பேற்று துணை முதலமைச்சர் பதிவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு நான் தான் தலைமை தாங்கினேன்.
வரும் தேர்தலில் கட்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். எனவே என்னை துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள அனுமதிக்குமாறு பாஜக தலைமையை கேட்டுக்கொள்கிறேன்.
தோல்வியைக் கண்டு நான் ஓடிப்போகும் ஆள் இல்லை. எனது பொறுப்பை ஏற்று குறை எதுவோ அதை நிறைவேற்ற முயற்சி செய்து புதிய யூகங்களை வகுத்து மக்கள் மத்தியில் மீண்டும் செல்ல தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.
English Summary
Maharashtra wise chief minister resign lok sabha election reflect