மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக பாஜக தேசிய பொதுச் செயலருக்கு எதிராக வழக்கு பதிவு!
maharastra BJP Leader election scam
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாக, பாஜக தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டேவுக்கு எதிராக முக்கிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பல்கார் மாவட்டத்தின் விரார் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக பகுஜன் விகாஸ் அகாதி தலைவர் ஹிதேந்திர தாக்குர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளது.
வீடியோவில், வினோத் தாவ்டே விடுதியில் தொண்டர்களுடன் பணத்தை அசைத்துக்காட்டி இருப்பது பதிவாகியுள்ளது. ஒரு பையில் ஏராளமான பணம் கொண்டு வந்து, மக்களவை வரவழைத்து பணம் வழங்கியதாக குற்றம் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பொதுமக்களுக்கு தெரியவந்ததும், தாவ்டே முற்றுகையிடப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், விரார் போலீசார் வினோத் தாவ்டேவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது.
English Summary
maharastra BJP Leader election scam