முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஏக்நாத் ஷிண்டே! மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் தேவேந்திர ஃபட்னவீஸ்!
Maharastra CM Resign
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த 20 ஆம் தேதி நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில், ஆளும் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இன்று தனது பதவியை ராஜிநாமா செய்து உள்ளார்.
மும்பை ஆளுநர் மாளிகையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணனிடம் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார் ஏக்நாத் ஷிண்டே. இந்த நிகழ்வில் துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னவீஸ் அவருடன் இருந்தனர்.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், முதல்வர் பதவியில் அனுபவம் கொண்ட தேவேந்திர ஃபட்னவீஸ் வரவே வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது.