தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்! கண்ணீருடன் நடிகை பரபரப்பு பேட்டி!
MANIKANDAN SANTHINI CASE ADMK
5 வருடங்களாக சேர்ந்து குடும்பம் நடத்தி, 3 முறை கர்ப்பத்தை கலைத்துவிட்டு, திருமணம்செய்து கொள்வதாகக் கூறிவிட்டு என்னை ஏமாற்றிவிட்டதாக, அதிமுக முன்னாள் மணிகண்டன் மீது, திரைப்பட துணை நடிகை சாந்தினி போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த மணிகண்டன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில், தான் அளித்த புகாரை திரும்பப் பெற்றுவிட்டதாக சாந்தினி கூறியதால், மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டின் முன்பு அமர்ந்து, துணை நடிகை சாந்தினி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், "மணிகண்டனுக்கு எதிரான புகாரை நான் திரும்பப் பெற்று விட்டேன். அவருடைய நலன் கருதி, என்னுடைய நலன் கருதி இந்த வழக்கை நான் திரும்ப பெற்றிருந்தேன்.
நான் வழக்கு திரும்பப் பெறும்போது மணிகண்டன் என்னிடம் கூறியது, என்னால் உன் வாழ்க்கை வீணாகி விட்டது. உனக்கு நான் அனைத்தையும் செய்து கொடுக்கிறேன். உன் வாழ்க்கையில் நீ வாழ்ந்து கொள் என்று உறுதியளித்திருந்தார்.
ஆனால் என்று வழக்கு திரும்பப் பெறப்பட்டதோ, அன்று முதல் அவர் தலைமறைவாகிவிட்டார். நேற்று மதுரைக்கு என்னை பார்ப்பதற்காக வரவழைத்தார். நான் அவரை பார்க்க சென்றேன். அவர் என்னை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அவர் வீட்டுக்கு சென்ற போது போலீசார் என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது போலீசாரிடம் நான், வழக்கை திரும்ப பெற்றது முதல், மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். என்னை ரவுடிகள் வைத்து மிரட்டுகிறார்கள். என் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார்கள். இது குறித்த காணொளிகளை நான் விரைவில் வெளியிடுவேன்.
கடந்த மூன்று மாதங்களாக அவர் தலைமறைவாகிவிட்டார். என்னுடைய அனைத்து செல்போன் எண்களையும் பிளாக் செய்து விட்டார். அவர் என்னிடம் பேச வேண்டும். அது தான் என் கோரிக்கை.
அவரைப் பார்க்க செல்ல முயன்றால் அவரின் உறவினர்கள் என்னை அடிக்க முயல்கிறார்கள். அவரை நான் என் கண்ணால் பார்க்கும் வரை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன். அவர் இங்குதான் தலைமுறையாக இருக்கிறார்" என்று நடிகை சாந்தினி தெரிவித்தார்.
English Summary
MANIKANDAN SANTHINI CASE ADMK