பிரபல அரசியல் கட்சி தலைவர் கைது செய்யப்படுகிறாரா? குவிக்கப்பட்ட போலீஸ்.!
Maratha Navnirman Party Raj Thackeray
மகாராஷ்டிரா மாநிலம் : மராட்டிய நவநிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, மராட்டிய நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவுரங்காபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்தாக்கரே, "ஒலிபெருக்கிகளை வைத்து அனுமன் பாடல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
ராஜ்தாக்கரேவின் இந்த கருத்து சர்ச்சையை ஆனதால், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா ரயில்வே தேர்வுகளில் கலந்துகொள்ள வந்த வட இந்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த வழக்கில், ராஜ்தாக்கரேவுக்கு ஜாமீனில் வெளியே வராத வகையில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த காரணமாக, அசம்பாவிதங்களை தவிர்க்க ராஜ்தாக்கரே வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
ராஜ்தாக்கரே கைது செய்யப்படுவாரா? என்ற ஒரு பரபரப்பும், பதட்டமான சூழ்நிலை அம்மாநிலத்தில் நிலவி வருகிறது.
English Summary
Maratha Navnirman Party Raj Thackeray