சர்தார் 2 அடுத்த அப்டேட் விரைவில்...! - டப்பிங் பணியில் கார்த்தி
Sardaar 2 next update coming soon Karthi in dubbing work
பிரபல திரைப்பட நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார் 2. இப்படத்தை இயக்கியுள்ள பி.எஸ்.மித்ரன், இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சர்தார் 2 படத்திற்கான டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து சர்தார் 2 படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று தற்போது தெரிகிறது.

இதற்குமுன்னர், சர்தார் 2 படத்திற்கான சண்டைக் காட்சியை படமாக்கும் போது, நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கினார். இதனால் காயமடைந்த நடிகர் கார்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார். மேலும் இந்த சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.மேலும், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளையும், கலை இயக்குநராக ராஜீவன், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளார்கள்.தற்போது இதைப்பற்றிய புகைப்படங்களும்,புதிய அப்டேட்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
English Summary
Sardaar 2 next update coming soon Karthi in dubbing work