மீண்டும் பணி வழங்க வேண்டும்..பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பட்டை நாமத்துடன் உண்ணாவிரதம்!  - Seithipunal
Seithipunal


தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில்  பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் சட்ட கூலி ரூபாய் 18000 /-  ஆயிரம் சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பட்டை நாமத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி அரசின் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வவுச்சர் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அப்போது நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலை காரணம் காட்டி தேர்தல் துறை நீக்க சொன்னதாக சொல்லி அனைவரையும் பொதுப்பணித்துறை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அன்று முதல் கடந்த 10 ஆண்டு காலமாக மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டுவருகின்றனர்.

இந்த போராட்டத்தின் பயனாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் (:அதாவது ஒரு மாதம் சம்பளம் பெற்று இருந்தாலும்) சம்பளமாக  ரூபாய் 10500 /- வழங்கப்பட்டு மீண்டும் வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆணையை வெளியிட்டார்.

இதையடுத்து இந்த அறிவிப்பு செய்து 2 ஆண்டுகள் ஆகியும் வேலை வழங்காததால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில்  பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் சட்ட கூலி ரூபாய் 18000 /-  ஆயிரம் சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி இன்று 10-3-2025 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் சுதேசி மில் அருகில் பட்டை நாமத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி சுதேசி மில் அருகில் இன்று காலை புதுச்சேரி & காரைக்கால் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள்G.P. தெய்வீகன் , காரைக்கால் C. வினோத் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் பட்டை நாமத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது, அப்போது பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

 

           


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You have to be reinstated. Sacked PWD employees go on hunger strike


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->