மாரிதாஸ் வழக்கில் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


முதுகளத்தூர் மணிகண்டன் மரணம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து மாரிதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்களுக்காக போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜகவினர் போராட்டத்தில் இறங்கினர். மேலும், அவரை கைது செய்ய விடாமல் தடுக்கவும் முற்பட்டனர். இருப்பினும் அவரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

505 (1)(2), 124ஏ, 504,153ஏ பிரிவுகளில் வழக்குப் பதிந்தது செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற கிளை அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது. இருப்பினும், மாரிதாஸ் மீது மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், யூடியூபர் மாரிதாஸ் மீது போடப்பட்டிருந்த 2வது வழக்கையும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் குறித்து வீடியோ வெளியிட்டதற்காக மாரிதாஸ் மீது தொடரப்பட்ட அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாகும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என வழக்கு ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maridhas bail issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->