விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம்.? முக்கிய எம்எல்ஏவுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்.!!
may be mk stalin cabinet change
தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் மீது ஊழல் முறைகேடு புகார்கள் எழுந்ததை அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றினார். ராஜகண்ணப்பன் மாற்றாக போக்குவரத்து துறை அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசிங்கரன் மாற்றப்பட்டார்.
இதனிடையே விரைவில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்று அடுத்த மாதத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, இதுநாள்வரை எம்எல்ஏவாக மட்டுமே இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்க வேண்டும் என திமுகவினர் விரும்புவதால் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சித்துறை ஒதுக்கப்படுவது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சராக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி அளித்ததன் மூலமாக ஸ்டாலின் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதே பாணியில் ஸ்டாலின் தற்போது முதல்வராக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினை உள்ளாட்சித்துறை அமைச்சராக திமுக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபடுவார் என கூறப்படுகிறது.
English Summary
may be mk stalin cabinet change