''முஸ்லிம்களுக்கு கேடு விளைவிக்கும் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" மாயாவதி கோரிக்கை..!
Mayawati demands immediate repeal of the Waqf Board Amendment Act
வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதா 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக மாறி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 13 மணி நேரத்திற்கும் மேலான விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "வக்பு வாரிய திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், முஸ்லிம் மதத்தினருக்கு கேடு விளைவிக்கும் இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Mayawati demands immediate repeal of the Waqf Board Amendment Act