மேயர் தேர்தல்.. அடுத்தடுத்து போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 21 மாநகராட்சிகளிலும் திமுக தன் வசமாக்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.

இதனிடையே இன்று மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயரான மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு திமுகவின் பிரியா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி பிரியா தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

அதேபோல கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவையின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா ஆனந்தகுமார் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் என் பி ஜெகன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். 

திண்டுக்கல் மாநகராட்சி மேயராக திமுகவின் வேட்பாளர் இளமதி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். 

மதுரை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் இந்திராணி போட்டியின்றி தேர்வானார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayor election dmk win


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->