"அரசின் கொசு வழங்கும் திட்டம்." மேயர் பிரியா பேட்டி.! - Seithipunal
Seithipunal


மழைக்காலம் என்றாலே சென்னையில் நீர் தேங்கி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். இதன் காரணமாக பலரும் குடியிருக்கும் பகுதிகளில் கூட வெள்ளநீர் புகுந்து அவதிப்படுவார்கள். சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ள நீரில் தான் நடந்து சென்று அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் துவங்கினால், சென்னை மக்கள் பெரும் அச்சத்தில் தான் இருப்பார்கள். இந்த ஆண்டு வெள்ள நிவாரண பணிகளை அரசு முன்கூட்டியே செய்து முடித்து விட்டதாக கூறப்பட்டது. இதனால் அதிகப்படியான பாதிப்புகள் தவிர்க்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த மழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்களுக்கு தேவையான தற்காலிக தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

அத்துடன் பொதுமக்களுக்கு அரசு சார்பில் கொசு வலை வழங்கும் பணிகள் குறித்து சென்னை மேயர் பிரியா பேசினார். அப்பொழுது அவர் கொசுவலை வழங்கும் திட்டம் என்று கூறுவதற்கு பதில் கொசு வழங்கும் திட்டம் என்று தவறுதலாக பேசினார். இது குறித்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayor Priya about mosquito net


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->