அவன வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போறேன்! வைகோ கட்சி அலுவலகத்தில் பரபரப்பு! வெளியேறிய துரை வைகோ!
MDMK office Durai vaiko
சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் நேரத்தில், திடீரென ஒரு சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டத்தின் முடிவிற்கு முன்பே அலுவலகத்தை விட்டு துரை வைகோ காரில் ஏறி வெளியேற, அதனை பின்தொடர்ந்த சில மதிமுக நிர்வாகிகள், அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
அப்போது, அவரது அருகில் சென்ற ஒரு மூத்த நிர்வாகி, “ஏதேனும் தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள்” என தாழ்மையாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஒரு தொண்டர் “அவனை வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போயிடுறேன்” என கூச்சலிட்டதையடுத்து பரபரப்பான நிலை ஏற்பட்டது.
இந்த வார்த்தைகள் கூட்டத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் காரணம் குறித்து தெளிவான விளக்கம் வெளிவராத நிலையில், இது தொடர்பான சலசலப்புகள் மதிமுக வட்டாரத்தில் பரவி வருகின்றன.