மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் அமைச்சர் துரைமுருகன் இன்று சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசுகிறார். 

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை மறுநாள் டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லிச் சென்றார். இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசுகிறார். 

அப்போது காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதிக்கப்பட்டால் தமிழக அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்வார்கள் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையை பொறுத்து அடுத்த கட்ட நகர்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Durai Murugan meeting with Union Water Resources Minister Gajendra Singh Segawat today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->