என்னாச்சு.? பிரச்சார மேடையில் கண்கலங்கிய அமைச்சர் துரைமுருகன்..!! - Seithipunal
Seithipunal


வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 

அப்போது பிரச்சார மேடையில் தன் தாயின் இறப்பு குறித்து பேசிய துரைமுருகன் கண் கலங்கியது கூடியிருந்த திமுக உடன் பிறப்புகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இது குறித்து பேசிய துரைமுருகன் "என் தாய் உடல் நலக்கறைவு ஏற்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைக் காண சென்னையில் இருந்து ஓடோடி வந்து பார்த்தபோது அவர் இறந்து பிணமாக கிடந்தார். 

என் அம்மாவின் காது, மூக்கு, கழுத்தில் ஒரு போட்டு தங்கம் கூட இல்லை. காது மூக்கில் தொடப்ப குச்சி போட்டுக்கிட்டே எங்க அம்மா இறந்து போனார். அவருக்கு பிறந்தவன் நான்.. இனிமேல் எந்த அம்மாக்களும் அதுபோல சாகக்கூடாது" என கண்கலங்கி பேசினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister duraimurugan crying in election campaign


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->