இடைச்செருகலாக வந்த எடப்பாடி... எகிறி அடித்த அமைச்சர் காந்தி... இலவச வேட்டி, சேலை விவகாரத்திற்கு பதிலடி...!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை வழங்க வேண்டும். அவ்வாறு வேட்டி, சேலை வழங்கப்படாவிட்டால் நெசவாளர்களையும் ஏழை எளிய மக்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் "பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓர் அர்த்தமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 19/11/2022 அன்று தலைமைச் செயலகத்தில் பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ள இலவச வேட்டி சேலைகளின் தரத்தினையும் சேலைகளின் வண்ணங்களையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வு கூட்டம் குறித்து செய்திகள் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளிவந்தது.

இதைக் கூட பார்க்காமல் எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். வரும் பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்காக ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தரமான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு நெசவாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வழங்க வேண்டிய துணிகளை கொள்முதல் செய்து உரிய நேரத்தில் வழங்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் இடைச்செருகலாக வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியைப் பற்றி குறை சொல்வதற்கு எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு அறிக்கையை மனம் போன போக்கில் வெளியிட்டுள்ளார். இனிமேலாவது பத்திரிகைகளையும் ஊடகங்களையும் பார்த்து அரசு செய்து வரும் சாதனை உணர்ந்து அவர் அறிக்கை விட வேண்டும். இடைக்கால எடப்பாடி பழனிச்சாமி குழப்பமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Gandhi response to EPS pongal gift allegations


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->