'கங்குவா' ஃப்ளாப்! அழாத குறையாக குமுறிய நடிகை ஜோதிகா!
Kanguva review Jyotika statement
கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா மனம் வெதும்பி வேதனை தெரிவித்துள்ளார்.
மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்? என்றும் நடிகை ஜோதிகா தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன் என்றும் நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பு பின்வருமாறு:
"கங்குவா படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனங்களை வெளியிட தொடங்கிவிட்டனர். படத்தின் நல்ல அம்சங்களை விமர்சகர்கள் தவிர்த்துவிட்டனர்.
சமீபத்தில் வெளியான இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்ற படங்களை கூட இந்தளவுக்கு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை.
கங்குவா படத்தில் சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் இருந்தது. கங்குவா படத்தில் ஒளிப்பதிவு இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வகையில் உள்ளது.
இதை நான் சூர்யாவின் மனைவியாக கூறவில்லை, சினிமா பிரியராக தெரிவிக்கிறேன். குறைகள் இல்லாமல் படம் எடுக்க முடியாது, அதற்காக ஒட்டுமொத்த படத்தையும் குறை கூற கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Kanguva review Jyotika statement