சர்ச்சையில் சிக்கிய தனுஷ்!...பொங்கியெழுந்த நயன்தாராவிற்கு கார்த்திக் ஆதரவு! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம், 'நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல்' என்ற பெயரில் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

அண்மையில் இந்த படத்திற்கான டிரெய்லர் வெளியான நிலையில், அதில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த  நானும் ரவுடிதான் படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது.  இதனைக் கண்ட நடிகர் தனுஷ், அந்த வீடியோவிற்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இது தொடர்பாக நயன்தாரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தன் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் நடிகர் தனுஷ் பழிவாங்குகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பாக குற்றம் சாட்டி, இது குறித்த அறிக்கையினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் படத்தில் நடித்திருந்த பல நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நயன்தாரா, தனுஷ் நடிப்பில் வெளியான 'யாரடி நீ மோகினி' படத்தில் நடித்திருந்த கார்த்திக் குமாரும் நயன்தாராவுக்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Controversial dhanush karthik supports nayanthara


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->