விரைவில் அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்.. உறுதி செய்த அமைச்சர் மூர்த்தி.! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அடையாளமாக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுவதால் அவருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என அன்பில் மகேஷ் போன்ற அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதேபோன்று இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகளும், திமுக தொண்டர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்கு முன்பு தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அசுபமாக கருதப்படும் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் அதற்கு முன்பே பதவியேற்பு விழா நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில், கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி அவரது பிறந்தநாளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என மூத்த அரசியல்வாதிகள் பலமணி நேரம் காத்திருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சென்றனர்.

பிறந்த நாளன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினிடம், உங்களுக்கு அமைச்சர் பதவி விரைவில் கிடைக்கும் என்று பேசப்படுகிறதே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு அதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று பதிலளித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக பதிவேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தன்னுடைய தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் உதயநிதி ஸ்டாலினின் பணி, ஒரு தொகுதியோடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அவரது பணி தொடர வேண்டும். மேலும் கூடிய விரைவில் அவர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் அது நாடறிந்த உண்மை என தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக இளைஞரணி ஏற்கனவே வலுவாக உள்ள நிலையில், அதன் செயலாளர் விரைவில் அமைச்சராக உள்ளதால் இளைஞர் அணி இன்னும் வலுவடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister moorthy speech about udhayanithi Stalin minister post


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->