'குறை இருக்கா.. நீ கொஞ்சம் வாய மூடு'.. அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு.!
Minister ponmudi scolding women in thirukovilur
அரசு விழா ஒன்றில் பெண் ஒருவரை நீ வாய மூடு என அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் புதிதாக சீரமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி உங்களுக்கு ஏதும் குறைகள் இருக்கிறதா என கேட்டார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இங்கே எல்லாமே குறையாக தான் இருக்கிறது என கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக அமைச்சர் பொன்முடி அந்த பெண்ணை பார்த்து குறை இருக்கா நீ கொஞ்சம் வாயை மூடு என கூறியுள்ளார்.
மேலும் உங்க கணவர் எங்கே எனக் கேட்க அவர் இறந்து விட்டார் என அந்த பெண் கூறினார். அதற்கு அமைச்சர் பொன்முடி நல்ல வேலை அவர் இறந்துவிட்டார் எனக் கூறி நக்கலாக சிரித்தார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசும்போது மகளிர் இலவச பேருந்து திட்டத்தை, நீங்கள் எல்லோரும் ஓசியில் தானே பயணம் செய்யறீங்க என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Minister ponmudi scolding women in thirukovilur