தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள் - அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலையத் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அதில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, "ஆண்டவன் சொத்தை யாராவது அபகரித்தால் அதை நாட்டை ஆள்பவர்கள் தான் கேட்க வேண்டும். அந்த வகையில் ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் திமுக ஆட்சியில் மீட்கப் பட்டுள்ளன.

ஆனால் இதற்கு முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வெறும் ரூ. 3 ஆயிரத்து 819 கோடி மதிப்புள்ள நிலங்கள் மட்டுமே மீட்கப் பட்டன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 8 ஆயிரத்து 962 கோவில்களின் திருப்பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளோம். 

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 1810 கோவில்களில் திருக்குட முழுக்கு நடைபெற்றுள்ளது. மேலும் 15 கோவில்களில் தற்போது திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ரூ. 1405 கோடிகள் செலவு மதிப்பில் நடைபெற்று வருகின்றன. 

இந்தியாவிலேயே கோவில்களின் மாநிலமாக இருப்பது தமிழ்நாடு தான். நாம் கோவில்களை வைத்து கலைகளையும், பண்பாட்டையும் தான் வளர்க்கிறோம். கலவரத்தையும், பிரிவினையையும் வளர்க்கவில்லை.  தற்போது ஆன்மீகத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். அது மனித நேயம் மிகுந்த தமிழ்நாட்டில் ஒரு காலத்திலும் முடியாது" என்று அமைச்சர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sekar Babu Speaks in TN Assembly


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->