எதிர்க்கட்சி ஏவி விட்ட சதி இது!!! திமுக ஆட்சியின் சாதனை பல...! - அமைச்சர் செந்தில் பாலாஜி - Seithipunal
Seithipunal


தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபான முறைகேடு புகார்க் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,"திமுக ஆட்சியின் சாதனைகளைப் பொறுத்து கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறையை ஏவி டாஸ்மாக்கில் சோதனை நடைபெற்றது.எந்த ஆண்டு போடப்பட்ட FIR என்பது பற்றி அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மேலும் மதுபான டெண்டர்களில் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கவில்லை.

இந்த டாஸ்மாக் நிறுவனத்தைப் பொறுத்தவரை அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் டெண்டர்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் பணியிடமாற்றம் பொறுத்தவரையில் எந்தத் தவறும் இல்லை, அது அவர்களது குடும்ப சூழலைப் பொறுத்தது. ரூ.1,000 கோடி முறைகேடு எனப் பொத்தம்பொதுவாக குறைகூறுவதை ஏற்க முடியாது.

ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக முன்னதாக ஒருவர் கூறுகிறார், பின்னர் அமலாக்கத்துறைச் சோதனை செய்துவிட்டு அதையே கூறுகிறது.டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து வருகிறது.மதுபான கொள்முதலில் எந்தவிதமான சலுகைகளும் காட்டப்படவில்லை.

அமலாக்கத்துறையின் வழக்குகள் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படும்.பட்ஜெட் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதைத் தடுக்க நேற்று அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.ஏற்கனவே இருந்த கடைகளில் 500 கடைகளை நாம் மூடியுள்ளோம்.அரசின் மீது அவதூறைப் பரப்ப வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிடுகிறது.

ஊழியர் தவறு செய்தால் அவர்மீது நடவடிக்கை எடுத்தால் அது தவறா?தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற கோஷம் மக்களின் கோஷமாக மாறியுள்ளது" எனத் தெரிவித்தார் . இது தற்போது எதிர்கட்சிகளைச் சண்டைக்கு இழுப்பதுபோல் இருப்பதாகப் பலரும் விமர்சங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Senthil Balaji said This is a conspiracy hatched by the opposition The achievements of the DMK regime are many


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->