சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ய காரணமாக இருந்த அமைச்சர்!
Minister supporters caused Subbulakshmi Jagatheesan to resign
அமைச்சர் ஆதரவு பெற்ற இரண்டு ஒன்றிய செயளாலர்கள் செய்த சதி! பாஜகவிடம் தோல்வி அடைந்த திமுக!
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்ராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த மாதம் 29ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததாக கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் திமுகவிலிருந்தும் விலகியதற்கு காரணம் இரண்டு ஒன்றிய செயலாளர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளரான அந்த இரண்டு ஒன்றிய செயலாளர்களை சமாளிக்க முடியாமல் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தெரிய வருகிறது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி இடம் தோல்வி அடைந்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர் வெற்றி பெற்று இருந்தால் தமிழக சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெற்றிருப்பார் என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.
மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் மற்றும் கொடுமுடி ஒன்றிய செயலாளர் சின்னசாமியை வைத்து அமைச்சர் முத்துசாமி செய்த உள்ளடி வேலையால் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்கடிக்கப்பட்டுள்ளார் என ஆதங்கப்படுகின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.
தன்னை தோற்கடித்த மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் மற்றும் கொடுமுடி ஒன்றிய செயலாளர் சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்கும்படி கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இரண்டு ஒன்றிய செயலாளர்கள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியில் இருந்து உள்ளார் சுப்புலட்சுமி.
திமுக எனும் பெரும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியில் இருந்தும் சாதாரண இரண்டு ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று ஆதங்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
கட்சிப் பதவியில் மட்டும் உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசனால ஈரோடு மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர்களான குணசேகரன மற்றும் சின்னசாமியின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள சுப்புலட்சுமி வழங்கும் உத்தரவுகள் விண்ணப்பங்கள் என எதையும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. இதற்கு முழு காரணம் அமைச்சர் முத்துசாமியின் கண்டிப்பான உத்தரவு என முனுமுனுக்கின்றனர் ஈரோடு உடன்பிறப்புகள்.
அமைச்சர் முத்துசாமியை மீறி ஈரோடு மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாத சூழலில் பல முறை தலைமையிடம் பேசியும் எந்த பலனும் இல்லாத காரணத்தால் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சுப்புலட்சுமி விலகியதாக திமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.
English Summary
Minister supporters caused Subbulakshmi Jagatheesan to resign