பாஜக ஒரு ஆடியோ, வீடியோ கட்சி.. போட்டு தாக்கிய உதயநிதி..!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி அதானிக்கு நாடாளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் மட்டும் தான் வழங்கவில்லை..!!

திமுக இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்  தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் விளையாட்டுத் திடலில் திமுக மூத்த முன்னோடிகள் 700 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் கலந்து கொண்டார்.

என்னை தொடர்ந்து விழா மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் "ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் நான் சுற்று பயணம் செய்து கழக மூத்த முன்னோடிகளுக்கு 25 கோடி மதிப்பீட்டில் பொற்கிழி வழங்கியுள்ளேன். இதுவரை இளைஞரணி சார்பில் கடந்த 2 மாதத்தில் மட்டும் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொற்கிழிகள் கழக மூத்த முன்னோடிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை உங்கள் வழியில் நான் பார்க்கிறேன்.

இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி அதானிக்கு ரயில் நிலையம், விமான நிலையம் என அனைத்தும் வழங்கி விட்டார். இன்னும் அவர் நாடாளுமன்றமும் சட்டமன்றமும் தான் இன்னும் வழங்கவில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஒரு கட்சியே கிடையாது. அது ஆடியோ வீடியோ எடுக்கும் கட்சியாக தான் உள்ளது. கூட்டணி குறித்து தினந்தோறும் மாற்றி மாற்றி பேசுவது தான் அதிமுக- பாஜக கூட்டணி" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Udhayanithi criticized BJP


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->