கல்யாணத்துக்கு வந்திருக்கியா.. டியூட்டிக்கு வந்திருக்கியா..?- போலீசை வறுத்தெடுத்த அமைச்சரின் மனைவி.. ஆந்திராவில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் அமைச்சரின் மனைவி ஒருவர் உள்ளூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற போது தன்னை காத்திருக்க வைத்த போலீஸ் அதிகாரியை நடு ரோட்டில் வைத்து வசை பாடியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் சமீபத்தில் தான் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு 4 ஆவது முறையாக ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். மேலும் ஜன சேனா கட்சியின் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் சந்திரபாபுவின் அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் மண்டிப்பள்ளி ராம்பிரசாத் ரெட்டி. இவரது மனைவி ஹரிதா ரெட்டி, அன்னமய்யா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். 

அப்போது தன்னை காக்க வைத்ததற்காக ஒரு போலீஸ் அதிகாரியை நடு ரோட்டில் வைத்து "உங்களுக்கு இன்னும் விடியவில்லையா? டியூட்டிக்கு வந்திருக்கியா? இல்ல கல்யாணத்துக்கு வந்திருக்கியா? யார் சம்பளம் தருவது? அரசாங்கமா.. அல்லது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியா?" என்று கடுமையாக சாடி இருக்கிறார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தனது எக்ஸ் பக்கத்தில், "அமைச்சரின் மனைவிக்கு போலீஸ் ராஜ மரியாதை செய்ய வேண்டுமா?" என்று  கடுமையாக விமர்சித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ministers Wife Scolds COP in Andhra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->