மே 03-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!
MK District Secretaries meeting on May 3rd
எதிர்வரு மே மாதம் 03-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற (03.05.2025) சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கட்சி வளர்ச்சி மற்றும் ஆக்கப் பணிகள் குறித்தும், 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
MK District Secretaries meeting on May 3rd