அழகிரி நாலு அடி பாய்ந்தால், எட்டு அடி பாய்ந்த முக ஸ்டாலின்! பரபரப்புக்கு தயாராகும் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


கருணாநிதியின் மகன்களில் ஒருவரான முக அழகிரி, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி அன்று திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதுவரை,  முக அழகிரி தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்து வந்தார்.

கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. கட்சியில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது.    

இதனிடையே கருணாநிதி ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் முக அழகிரி, கருணாநிதியின் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். 

அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 11 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் அவருடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு  மதுரையில், சிலை அமைக்க உள்ளதாக அழகிரி அதிரடியாக தெரிவித்தார்.  மதுரையில் மதுரையில் கருணாநிதியின் சிலை வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளதாக முக அழகிரி தெரிவித்துள்ளார்.   

இதனிடையே கலைஞருக்கு சிலை வைக்கவே தயாராகிவிட்டார்.  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள கலைஞரின்  8 அடி உயர முழு வெண்கல திருவுருவச்சிலை வடிவமைப்புப் பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலை உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin see the kalaignar statue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->