கடலோர காற்றில் மு.க ஸ்டாலினின் சைக்கிள் பயணம்!....சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே? - அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!
MK Stalins cycle ride in the coastal breeze Where are the Cycle Paths in Chennai Anbumani Ramadoss A barrage of questions
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் என பல்வேறு ஒப்பங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்டு பாடியபடி சைக்கிளில் பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னையில் மாநில அரசுத் திட்டங்களின்படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் பாதைகளையும் காணவில்லை என்றும், வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் சைக்கிள்களையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
MK Stalins cycle ride in the coastal breeze Where are the Cycle Paths in Chennai Anbumani Ramadoss A barrage of questions