நாடு நலம் பெற; ஆட்சியில் பங்கு பெற! 40-லும் வெற்றி பெற! உழைக்கச் சொல்லும் மு.க ஸ்டாலின்!
MKStalin said DMK wins 40 seats only participate in CentralGovt
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதேபோன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக இந்த விழாவில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் "நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும். அதற்கு 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் "இண்டியா"கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்.
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அப்படி முழு வெற்றியை பெற்றால் மட்டுமே அடுத்து அமைய போகும் ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கியப் பங்காற்ற முடியும். நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்தத் திருமண விழாவில் உறுதி எடுத்துக் கொண்டு, "நாற்பதும் நமதே நாடும் நமதே" என்ற முழக்கத்துடன் விடைபெறுகிறேன்" என திருமண விழாவில் திமுக தொண்டர்கள் மத்தியில் பேசி உள்ளார்.
English Summary
MKStalin said DMK wins 40 seats only participate in CentralGovt