சமூகநீதியை நிலைநாட்ட உழைக்கிறோம்.! - சொல்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.!!
mkstalin said We are working to establish social justice
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த விழா மேடையில் பேசியக்ஞ் அவர் "சமூக நீதி, சமத்துவம், சமதர்மம் ஆகிய மானிட நெறிகளை தமிழ்நாட்டில் நிலைநாட்ட நாங்கள் உழைத்து வருகிறோம். அதற்காக அரும்பாடுபட்ட டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறோம்.
ஆதிதிராவிடர் நலனை கவனம் செலுத்தி திட்டங்களை தீட்டி வருகிறோம். மானுட நெறிகளின் படி தமிழ்நாட்டை உருவாக்க என்னை நானே ஒப்படைத்து உழைத்து வருகிறேன். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர்களுக்கு விருதும் பரிசு தொகையும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை உயர்த்த பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறோம்” என பேசுகியுள்ளார்.பீகார் போன்று தமிழகத்திலும் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வகுத்துவரும் நிலையில் இவ்வாறு பேசியுள்ளார்.
English Summary
mkstalin said We are working to establish social justice