நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. சற்றுமுன்பு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சி.!!
MNM Party 4th candidate list
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வருகின்ற பிப்ரவரி மாதம் 19 மாதம் தேதி ஒரேகட்டமாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தேர்தலுக்கான மனுத்தாக்கல் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி (நேற்று) தொடக்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியும், பிப்ரவரி 7ஆம் வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் 4-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாற்றத்திற்கு வாக்களியுங்களென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
MNM Party 4th candidate list