நாளை வெளியாகவுள்ள அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் 03-வது பாடல் வெளியீடு..!
3rd song release from the movie Vidamayurchi
தென்னிந்திய திரையுலகின் பாஸ் ஆபீஸ் கிங் மேக்கர்களில் ஒரு நடிகர் அஜித்குமார். முன்னணி நடிகரான அஜித் கார் ரேஸிலும் தனித்து விளங்குபவர். மத்திசை அரசு இவருக்கு 'பத்ம விபூஷண்' விருதும் வழங்கியது. அஜித் கடைசியாக துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார்.
மகிழ்த்திருமேனி இயக்கிய இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'சவதீகா' மற்றும் 02-வது பாடலான , 'பத்திக்கிச்சி' வெளியாகி வைரலாகிய நிலையில், 03-வது பாடலான 'தனியே' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.
ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://x.com/LycaProductions/status/1887139129324085464
https://www.youtube.com/watch?v=Tz0bTrofPpw
English Summary
3rd song release from the movie Vidamayurchi