திருநங்கைகளுக்கு தடை விடுத்துள்ள டொனால்ட் ட்ரம்ப்..!
Donald Trump bans transgender people
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றத்தை தொடர்ந்து, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்தவகையில், பெண்கள் விளையாட்டில் திருநங்கைகள் பங்கேற்பதை தடை செய்யும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து டிரம்ப் கூறியதாவது:-
இந்த நிர்வாக உத்தரவின் மூலம் பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிந்துவிட்டது. பெண்களை ஆண்கள் வெல்ல அனுமதிக்க மாட்டோம். பெண் விளையாட்டு பெருமைமிக்க பாரம்பரியத்தை நாங்கள் பாதுகாப்போம். ஆண்கள் எங்கள் பெண்களை அடிக்க, காயப்படுத்த, ஏமாற்ற அனுமதிக்கமாட்டோம். இனி பெண்கள் விளையாட்டு பெண்களுக்கு மட்டுமே என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பிறப்பால் ஆணாக இருந்து திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகளாக பங்கேற்கத் தடை செய்யும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளது அந்நாட்டு திருநங்கைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Donald Trump bans transgender people