தமிழுக்கு தலைவணங்கு.. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் செய்தது மாநிலத்தின் தாய்மொழியை அவமதிக்கும் செயல்.. மக்கள் நீதி மய்யம்.!!
MNM Party tweet for RBI Officers
இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ரிசர்வ் வங்கியின் ஒரு சில அதிகாரிகள் எழுந்து நிற்க வில்லை.
நிகழ்ச்சி முடிந்த பின்பு தமிழ்த்தாய் வாழ்த்திற்கு என் மரியாதை செலுத்தவில்லை என ஒரு சிலர் அவர்களைக் கேள்வி கேட்டனர். அதற்கு தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் கூறி இருப்பதாக அவர்கள் பதிலளித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு, சலசலப்பு உண்டானது. ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க மறுப்பது, மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பது ஆகும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல, மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பதும் ஆகும். இது கடும் கண்டனத்துக்குரியது. நிகழ்ந்த சம்பவத்திற்கும், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். #தமிழுக்கு_தலைவணங்கு என தெரிவித்துள்ளனர்.
English Summary
MNM Party tweet for RBI Officers