'பாஜக - அதிமுக கூட்டணி இணைந்ததில் மகிழ்ச்சி; தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபட்டு, வலிமையாக இருப்போம்' என மோடி கருத்து..!
Modi says I am happy that the BJP and AIADMK alliance has come together
ஊழல் மற்றும் பிளவுபடுத்தும் தி.மு.க.வை விரைவில் வேரோடு பிடுங்குவது முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தமை தொடர்பில் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில்பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது; தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி. எங்கள் மற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாநிலத்திற்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வோம். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், ஊழல் மற்றும் பிளவுபடுத்தும் தி.மு.க.வை விரைவில் வேரோடு பிடுங்குவது முக்கியம் என்றும், அதை எங்கள் கூட்டணி செய்யும் என்று அந்த பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Modi says I am happy that the BJP and AIADMK alliance has come together