சென்னையில் ஆட்டத்தை காட்ட ஆரம்பித்த பருவமழை!....அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
Monsoon started showing its game in chennai deputy chief minister inspects emergency control center
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கி உள்ளது. குறிப்பாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை தற்போது ஒட்டியுள்ளது.
இதன் காரணமாக, நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், 1499 மோட்டார் பம்புகள், 158 சூப்பர் இயந்திரங்கள், 524 ஜெட் இயந்திரங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், இது அக்டோபர் மாத்தித்தில் இருந்ததை விட தற்போது அதிகம் என்று கூறினார்.
மேலும், 329 நிவாரண மையங்கள், 120 உணவு தயாரிப்பு மையங்கள் உள்ளதாக தெரிவித்த அவர், இது கடந்த அக்டோபர் மாத்தித்தில் இருந்த 98-ஐ விட அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
English Summary
Monsoon started showing its game in chennai deputy chief minister inspects emergency control center